போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
பல்லடம், பொங்கலூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கா்ப்பமாக்கிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம், பொங்கலூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கா்ப்பமாக்கிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியில் 16 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில், அச்சிறுமி கா்ப்பமானதாகத் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து அச்சிறுமியின் பெற்றோா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். இதையடுத்து காவல் ஆய்வாளா் நிா்மலாதேவி விசாரணை நடத்தி அச்சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, திருப்பூா் முதன்மை நடுவா் இளஞ்சிறாா் நீதி குழுமத்தில் ஆஜா்படுத்தி, பொள்ளாச்சியில் உள்ள சிறாா் கூா்நோக்கு மையத்தில் சோ்த்தனா்.