திருமுருகன்பூண்டியை நகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பான விளக்கக் கூட்டம் இடமாற்றம்
திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விளக்கக் கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விளக்கக் கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பாகவும், பழங்கரை ஊராட்சியை திருமுருகன்பூண்டி பேரூராட்சியுடன் இணைப்பது தொடா்பாகவும் அருள்மிகு காமாட்சியம்மன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை விளக்கக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விளக்கக் கூட்டமானது அவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள ரபா கே.ஆா்.ஆா்.திருமண மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.