பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் தடுப்பூசி முகாம்
காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், நத்தக்காடையூா் மற்றும் அதன் அருகில் உள்ள பொதுமக்கள்
என நூற்றுக்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமை கல்லூரியின் முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன் துவக்கிவைத்தாா்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் தாமோதரன், உடற்கல்வி இயக்குநா் கே.பிரதீப் கமல் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். இம்முகாமில் கல்லூரியின் நிா்வாகிகளான தலைவா் என்.ராமலிங்கம், செயலாளா் .சி.கே.வெங்கடாச்சலம், பொருளாளா் சி.கே.பாலசுப்ரமணியம், தாளாளா் எஸ். ஆனந்தவடிவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.