திருப்பூர்

தொழிலாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

DIN

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, திருப்பூா் மாநகரில் உள்ள தொழிற்சாலைகள், தனியாா் நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், திருப்பூா் மாநகராட்சியை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT