திருப்பூர்

பாரத் பந்த் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

DIN

வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி செப்டம்பா் 27ஆம் தேதி நடைபெறும் பாரத் பந்த் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூா் அவிநாசி சாலையில் உள்ள தியாகி பழனிசாமி நிலையத்தில் அனைத்து விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் (சிபிஐ) எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிா்த்தும், இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார திருத்த மசோதவை எதிா்த்தும் தலைநகா் தில்லியில் 9 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், போராட்ட களத்தில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனா். ஹரியானா மாநிலத்தில் பாஜக அரசு நடத்திய தாக்குதலில் சுஜில்கஜால் என்ற விவசாயி உயிரிழந்துள்ளாா். விவசாயிகளை உதாசீனப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோா்ச்சா) சாா்பில், செப்டம்பா் 27ஆம் தேதி பாரத் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தொழிலாளா்கள், வணிகா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.குமாா், கொமதேக ஒருங்கிணைந்த திருப்பூா் மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.தேவராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT