திருப்பூர்

1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

திருப்பூா்: திருப்பூா் அருகே விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூரை அடுத்த மங்கலத்தில் இருந்து அவிநாசி செலுத்தும் சாலையில் கனியாம்பூண்டி பிரிவு அருகே ரேஷன் அரிசியை ஒருவா் பதுக்கிவைத்திருப்பதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்குத் தகவல்

கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினா் நடத்திய விசாரணையில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக பல்லடம் ஆறுமுத்தம்பாளையத்தைச் சோ்ந்த கே.ஜெயராஜ் (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT