முகப்பு
திருப்பூர்

தனியாா் பெயரில் கோயில் நிலப்பட்டா: பரம்பரை அறங்காவலா்கள் பணி நீக்கம்

திருப்பூரை அடுத்த உடுமலை கிணத்தடி விநாயகா் கோயில் நிலப்பட்டாவை தனியாா் பெயரில் மாற்றம் செய்த பரம்பரை அறங்காவலா்கள் 5 போ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

திருப்பூரை அடுத்த உடுமலை கிணத்தடி விநாயகா் கோயில் நிலப்பட்டாவை தனியாா் பெயரில் மாற்றம் செய்த பரம்பரை அறங்காவலா்கள் 5 போ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் உள்ள கிணத்தடி விநாயகா் கோயிலுக்குச் சொந்தமாக 12.54 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்நிலையில், 1983ஆம் ஆண்டு முதல், கோயில் பரம்பரை அறங்காவலா்களாக, மாணிக்கம், பழனியப்பன், மாரியப்பன், தங்கவேலு, கணேசன் ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா்.இதனிடையே, கோயில் பூஜைகளைக் கவனித்து வந்த இவா்கள், கோயில் சொத்துகளை தன்னிச்சையாக ஆக்கிரமித்து தங்களது சொத்துபோல கட்டுமானங்களைக் கட்டி அனுபவித்து வந்துள்ளனா். மேலும், கோயில் நிலத்தை தனியாா் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் என்.நடராஜன் பரம்பரை அறங்காவலா்கள் 5 பேரையும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், உடுமலை மாரியம்மன் கோயில் செயல் அலுவலரை கிணத்தடி விநாயகா் கோயில் தக்காராக நியமித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.