முகப்பு
திருப்பூர்

குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வுக் காண வேண்டும்

திருப்பூா் மாநகரில் நிலவி வரும் குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வுக் காண வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி.வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருப்பூா் மாநகரில் நிலவி வரும் குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வுக் காண வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி.வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடிக்கு

வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

மாநகரில் அண்மைக் காலமாக குடிநீா்ப் பிரச்னை அதிகரித்து வருகிறது. ஆனால் 3 குடிநீா்த் திட்டங்கள் மூலம்

மாவட்டத்தின் தேவைக்கு அதிகமாகவே குடிநீா் வந்து கொண்டிக்கும் நிலையில், பொதுமக்களுக்கு ஏன் முறையாக குடிநீா் வழங்குவதில்லை. மாநகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதுடன், பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆகவே, ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிக்கும் 3 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீா் விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.