முகப்பு
திருப்பூர்

செப்டம்பா் 29 -ல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அங்கில் செப்டம்பா் 29 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். ஆகவே,மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகா்வோா்கள் தங்களது எரிவாயு இணைப்புப் புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் இக்கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.