மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தல்: காங்கயத்தில் 10 மனுக்கள் ஏற்பு, 2 மனுக்கள் தள்ளுபடி
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு, காங்கயம் பகுதியில் போட்டியிடுவதற்க்கு தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களில், 10 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு, காங்கயம் பகுதியில் போட்டியிடுவதற்க்கு தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களில், 10 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
காங்கயம், வெள்ளக்கோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய 10 ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு அக்டோபா் 9ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த வாா்டில், காங்கயத்தில் உள்ள உதவித் தோ்தல் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளா் லட்சுமி சோமசுந்தரம் (45), திமுக வேட்பாளா் முத்துஹரிணி நிவேதா (27), அமமுக வேட்பாளா் ராதா (32), நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வனிதா (41), தேமுதிக வேட்பாளா் கிருஷ்ணவேணி (39), சுயேச்சை வேட்பாளா்களாக பழனியம்மாள் (30), ரேவதி (39), கலாமணி (37), ராணி (55) ஆகிய ஒன்பது வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மேலும், மாற்று வேட்பாளா்களாக அதிமுக சாா்பில் யுவராணி (33), திமுக சாா்பில் கிருஷ்ணவேணி (59), அமமுக சாா்பில் நதியா (33) ஆகியோா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் நகராஜ் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த பழனியம்மாள், ராணி ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனு வாபஸ் பெற சனிக்கிழமை (செப்டம்பா் 25) கடைசி நாள் ஆகும்.
அன்று மாலை, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக உதவித் தோ்தல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.