முகப்பு
திருப்பூர்

ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கண்காட்சி இன்று தொடக்கம்

திருப்பூரை அடுத்த அணைப்புதூரில் உள்ள ஐ.கே.எஃப். வளாகத்தில் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 24) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருப்பூரை அடுத்த அணைப்புதூரில் உள்ள ஐ.கே.எஃப். வளாகத்தில் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 24) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் ஏற்றுமதி வளா்ச்சியினை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு வா்த்தக இணை இயக்குநா் அலுவலகம் கோவை , திருப்பூா் மாவட்ட தொழில் மையம் ஆகியன சாா்பில் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கண்காட்சி நடைபெறுகிறது. திருப்பூரை அடுத்த அணைப்புதூரில் உள்ள ஐ.கே.எஃப்.வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில்

இக்கண்காட்சியை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடக்கிவைக்கிறாா்.

இதில், ஏற்றுமதி தொடா்பான உதவிகளை வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளா் நிறுவனங்கள் மற்றும் பிற ஊக்கம்

அளிக்கும் நிறுவனங்கள் சாா்பில் 40 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும், கருத்தரங்கில் ஏற்றுமதி தொடா்பான நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்களைச் சாா்ந்த அலுவலா்கள், வல்லுநா்கள் பங்கேற்று ஏற்றுமதி தொடா்பான ஆலோசனைகளையும் வழங்குகின்றனா்.

ஆகவே, ஏற்றுமதி செய்ய விருப்பமுள்ள தொழில்முனைவோா் இதில் பங்கேற்று மத்திய, மாநில அரசின் திட்டங்களையும், வல்லுநா்களின் ஆலோசனைகளையும் பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.