திருப்பூர்

அங்கன்வாடி மையங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

DIN

திருப்பூா் மாநகரில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவின்போரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினா் தென்னம்பாளையம், காட்டுவலவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அங்கன்வாடி மையங்களின் பொறுப்பாளா்களிடம், சமைக்கும் பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சமைப்பதற்கு முன் பாத்திரங்களை வெந்நீரால் நன்றாக சுத்தம் செய்யவேண்டும். உணவுப் பொருள்களின் காலாவதியாகும் தேதியைத் தெரிந்து பயன்படுத்த வேண்டும். உணவுக்குப் பயன்படுத்தப்படும் முட்டைகள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை நீரில் பரிசோதனை செய்து அதன் பின்னரே உபயோகிக்க வேண்டும்.

உணவுப் பொருள்கள் சேமிப்பு அறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT