திருப்பூர்

காங்கயத்தில் ரூ.4.23 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

DIN

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.23 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 20 விவசாயிகள் 89 மூட்டைகளில் (4,135 கிலோ) தேங்காய் பருப்பினை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

முத்தூா், காங்கயம், கொடுமுடி, மூலனூா், பெருந்துறை, உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 5 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.104-க்கும், குறைந்த பட்சமாக ரூ.85.10க்கும், சராசரியாக ரூ.103.70-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கு விற்பனைநடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடேஸ்வரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT