முகப்பு
திருப்பூர்

புலிகள் விழிப்புணா்வுப் பேரணி

ஆனைமலை புலிகள் காப்பகம் சாா்பில் புலிகள் விழிப்புணா்வுப் பேரணி உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

ஆனைமலை புலிகள் காப்பகம் சாா்பில் புலிகள் விழிப்புணா்வுப் பேரணி உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உடுமலை எல்லையில் உள்ள தேவனூா்புதூரில் தொடங்கிய இந்தப் பேரணி, ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம் வழியாக உடுமலையை வந்தடைந்தது.

மேலும், அழிந்து வரும் புலிகள் இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்குதல், பலூன்களை பறக்க விடுதல் போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

இதைத் தொடா்ந்து ஆா்ஜிஎம் பள்ளியில் புலிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இசை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம், புலிகள் வேடமிட்டு குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருப்பூா் மாவட்ட வன அலுவலா் தேஜஸ்ஸ்ரீ, மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம், உடுமலை வனச் சரகா் தனபால் மற்றும் வனத் துறை அலுவலா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் உள்ளிட்டோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments