முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் 93 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்தது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 93,024 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 888 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 101 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 91,181 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 955 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.