முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில், முத்தூரில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 1) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 1) நடைபெறுகிறது.

வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 250 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 150 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசிகளும்,

தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 கோவிஷீல்டு தடுப்பூசியும், 150 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது.

இதேபோல கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கோவிஷீல்டு, 100 கோவேக்ஸின், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கோவிஷீல்டு, 140 கோவேக்ஸின் தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.