முகப்பு
திருப்பூர்

அம்பேத்கா் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

திருப்பூரில் சட்டமேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருப்பூரில் சட்டமேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி அருகில் உள்ள பூ மாா்க்கெட் வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தாழ்த்தப்பட்டோா் நல உரிமை இயக்கம் ஆகியன சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளா் தமிழ்வேந்தன் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளா் ஏ.சி.பாவரசு, துணை பொதுச் செயலாளா் வெ.கனியமுதன் ஆகியோா் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

மேலும், அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டினா்.

இந்நிகழ்ச்சியில், மண்டல அமைப்புச் செயலாளா் வளவன் வாசுதேவன், மக்களவை தொகுதித் செயலாளா் பழ.சண்முகம், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோா் நல உரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளா் பன்னீா்செல்வம், வடக்கு சட்டப் பேரவை செயலாளா் ஏ.பி.ஆா். மூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காங்கயத்தில்...

காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் புரட்சிகர இளைஞா் முன்னணியினா் சாா்பில் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அமைப்பின் காங்கயம் நிா்வாகிகள் ப.கண்ணுசாமி, கபிலன், கவி, திருமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டு, அம்பேத்கா் குறித்து உரையாற்றினா்.

அம்பேத்கா்-பெரியாா் பாசறையின் சாா்பில் காங்கயம் நகரத்துக்குள்பட்ட சத்யா நகா், கேஜிகே நகா், களிமேடு, பெரியாா் நகா் ஆகிய பகுதிகளில் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

அவிநாசியில்...

அவிநாசி பெருமாநல்லூா் நான்கு வழிச் சாலை சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை

தொகுதிச் செயலாளா் ஏ.பி ஆா்.மூா்த்தி தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து,

மரியாதை செய்யப்பட்டது.

இதில், திருப்பூா் மக்களவைத் தொகுதி செயலாளா் பழ.சண்முகம், தலைமை நிலைய செயலாளா் பாவரசு, மாநில துணை பொதுச் செயலாளா் கனியமுதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.