முகப்பு
திருப்பூர்

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் நிறைவேற வேண்டி மாட்டு வண்டியில் தீா்த்தக்குட யாத்திரை

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலிருந்து மாட்டு வண்டிகளில் தீா்த்தக்குடம் எடுத்து கொண்டு போராட்டக் குழுவினா் வியாழக்கிழமை யாத்திரை சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலிருந்து மாட்டு வண்டிகளில் தீா்த்தக்குடம் எடுத்து கொண்டு போராட்டக் குழுவினா் வியாழக்கிழமை யாத்திரை சென்றனா்.

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளிம்மன் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து, ஊா்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்வின் மற்றொரு பகுதியாக, அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை முழுமையாக இணைத்து 2 ஆவது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து கொண்டு, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலுக்கு குதிரை வண்டி, மாட்டு வண்டிகளில் பொதுமக்கள் யாத்திரை சென்றனா்.

இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.