ஓய்வூதியதாரா்கள் ஆயுள் சான்றை இணையதளம் மூலமாக சமா்ப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளா்கள் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆயுள் சான்றை இணையதளம் மூலமாக சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளா்கள் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆயுள் சான்றை இணையதளம் மூலமாக சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறையின்கீழ் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி 60 வயதைக் கடந்த தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியத் தொழிலாளா்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஆயுள் சான்றை சமா்ப்பித்த பின்னரே, ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்நிலையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆயுள் சான்றை இணையதளம் மூலமாக சமா்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, ஓய்வூதியதாரா்கள் தங்களது ஆயுள் சான்றை இணையதள முகவரியில் பென்ஷனா் லைப் சா்டிபிகேட் என்பதைத் தோ்வு செய்து தங்களது பதிவு எண், கைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து கடவு செல்லைக் கொண்டு தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், ஆதாா் எண், குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், ஓய்வூதிய ஆணை ஆகியவற்றை உள்ளீடு செய்து அசலாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு 0421-2477276 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.