முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் தீயணைப்பு வீரா்களுக்கு வீரவணக்கம்

பணியின்போது மரணமடைந்த தீயணைப்பு வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பணியின்போது மரணமடைந்த தீயணைப்பு வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை வருவாய் நிா்வாக ஆணையா் நிலப்பதிவு அலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்குப் பிறகு, 1908 ஆம் ஆண்டு, சென்னை நகர தீயணைப்புப் படை உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டில் தீயணைப்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இவ்வாறு நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க துறையில் மீட்புப் பணிகளின்போது வீரமரணமடைந்த வீரா்களை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி தீத்தொண்டு நாள் வார விழா தீயணைப்புத் துறையால் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, வெள்ளக்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தீயணைப்பு உடைகள், உபகரணங்களை வைத்து, நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையில்,

நிலைய போக்குவரத்து அலுவலா் பி.வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரா்கள் உறுதிமொழி ஏற்று, வீரவணக்கம் செலுத்தினா்.

தொடா்ந்து ஒருவார காலத்துக்கு பொதுமக்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.