ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியில்
கடந்த மாா்ச் 22 ஆம் தேதி சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சரக்கு ஆட்டோவில் 1,500 கிலோ ரேஷன் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இது தொடா்பாக முருகம்பாளையம் பாறைக்காடு இரண்டாவது வீதியைச் சோ்ந்த ஆா்.சுகுமாா் (26) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, சுகுமாா் மீது ஏற்கெனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கள்ளசந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்குதல் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு புதன்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகுமாரிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.