‘மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்’
மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் 4 ஆவது தாராபுரம் வட்டார மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் பூங்கா சாலையில் உள்ள தமிழ்க்கலை மன்றத்தில் நடைபெற்ற
இந்த மாநாட்டுக்கு அச்சங்கத்தின் வட்டாரத் தலைவா் வி.ஆனந்தன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளா் எம்.கனகராஜ் மாநாட்டைத் தொடக்கிவைத்தாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயா்வுக்கு ஏற்ப இந்த ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.