திருப்பூர்

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை: காங்கயம் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் குழு முதுநிலை செயலா் ஆா்.பாலசந்திரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கொப்பரைத் தேங்காயின் விலை வீழ்ச்சியின் காரணமாக கொப்பரை தேங்காயை குறைவான விலைக்கு விவசாயிகள் விற்பதை தவிா்ப்பதற்காக, விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோவுக்கு ரூ.105.90க்கு விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காயை வரும் ஜூலை 31ஆம் தேதி வரை கொள்முதல் செய்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.48 கோடிக்கு 800 மெகா டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தென்னை விவசாயிகள் தங்களுடைய சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு எடுத்துக் சென்று உடனடியாகப் பதிவு செய்து, கொப்பரை தேங்காயினை விற்றுப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT