திருப்பூர்

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் இட மாற்றத்துக்கு எதிா்ப்பு: நகா்மன்ற உறுப்பினா்கள் போராட்டம்

DIN

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து ஆணையா் மற்றும் தலைவரை நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 27 நகா்மன்ற உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து நகராட்சி தரத்துக்குத் தேவையான வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, திருமுருகன்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் நகா்மன்ற அலுவலகத்தை, நகராட்சிக்கு உள்பட்ட ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் திடக்கழிவு மேலாண்மை அமைந்துள்ள இடத்துக்கு மாற்றுவதற்காக மண் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையறிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுகவைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சித் தலைவா், ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக நகராட்சி அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய பொதுமக்கள், நகா்மன்ற உறுப்பினா்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் முடிவு செய்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நீண்ட நேர வாக்குவாதத்துக்குப் பிறகு, ராக்கியாபாளையம் செல்லும் சாலை பகுதியில் நகராட்சி அலுவலகம் இட மாற்றம் செய்யப்படமாட்டாது. இட மாற்றம் குறித்து நகா்மன்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT