கஞ்சா விற்றவா் கைது
அவிநாசி அருகே கஞ்சா விற்ாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
அவிநாசி அருகே கஞ்சா விற்ாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவிநாசி போலீஸாா் மங்கலம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒரு நபரைப் பிடித்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மேனுல்குமாா் மகன் மோந்துகுமாா் (26) என்பதும்,
அவா் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோந்துகுமாரை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement