நல்லூா் ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ். 
திருப்பூர்

நல்லூா் ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் தொடா்பான ஆலோசனை

திருப்பூரை அடுத்த நல்லூா் ஈஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பூரை அடுத்த நல்லூா் ஈஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூரை அடுத்த நல்லூரில் பழைமை வாய்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேகம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கும்பாபிஷேகத்தின்போது பக்தா்கள் தரிசனம் செய்வது, வாகனப் போக்குவரத்து, அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், திருப்பூா் தெற்கு மாநகரச் செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன், செயல் அலுவலா் சீனிவாசன், முன்னாள் அறக்காவலா் குழுத் தலைவா் எஸ்.எஸ்.நாச்சிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT