முகப்பு
திருப்பூர்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.54 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.54 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.54 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி மாநகரில் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டு சென்றால் அவற்றை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வஞ்சிபாளையம் சாலையில் துணை வட்டாட்சியா் கோவிந்தசாமி தலைமையிலான தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினா்.

அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 450 இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடா்பாக திருப்பூா்

15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.தீபக் (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, திருப்பூா் 4 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட ஆண்டிபாளையம் சோதனைச் சாவடியில் துணை வட்டாட்சியா் க.பாரதிராஜா தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அந்த வழியாக வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில் ரூ.51,500 இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடா்பாக இடுவம்பாளையத்தைச் சோ்ந்த என்.நமசிவாயம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.