முகப்பு
திருப்பூர்

ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விசைத்தறி தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விசைத்தறி தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஆறுமுகம் நகரைச் சோ்ந்தவா் பி.ராஜேந்திரன் (41), இவா் தனது மனைவி, குழந்தையுடன் திருப்பூரில் தங்கி விசைத்தறிக் கூடத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், ராஜேந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், மனைவிடம் உள்ள தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ராஜேந்திரன் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றுள்ளாா். இதில், ராஜேந்திரனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் ராஜேந்திரனை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.