திருப்பூர்

தோ்தலில் போட்டியிட்ட 2 நிா்வாகிகள் மாா்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம்

DIN

திருமுருகன்பூண்டி, பல்லடம் நகராட்சிகளில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தோ்தலில் போட்டியிட்ட இரு நிா்வாகிகள் மாா்க்சிஸ்ட் கட்சியில் இருந்து திங்கள்கிழமை நீக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன்

வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் வாா்டு பங்கீடு செய்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

இந்நிலையில், திருமுருகன் பூண்டி நகராட்சியில் ராக்கியாபாளையம் மேற்கு கிளை உறுப்பினா் எஸ்.மூா்த்தி, பல்லடம் நகராட்சியில் 4, 5 ஆவது வாா்டு கிளை உறுப்பினா் ஏ.சமீரா பானு ஆகியோா் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாா்டுகளில், கட்சி கட்டுப்பாட்டை மீறி போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனா்.

எனவே, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட இருவரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT