திருப்பூர்

திருப்பூர்: சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

DIN

திருப்பூர் அருகே வேலம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாய அமைப்பினர் மற்றும் அனைத்து கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் வேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சிறிய குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுங்கச்சாவடி மையம் பராமரிக்கும் சாலை 32 கிலோ மீட்டர் எனும் நிலையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 21 கிலோ மீட்டர் சாலை அமைந்துள்ளது.

இந்த சாலைக்கும் சேர்த்து சுங்க வசூல் என்பது முறைகேடு எனவும் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம், விவசாய அமைப்புகள், மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முற்றுகை போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT