முகப்பு
திருப்பூர்

தொழிலாளிக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்தி கைப்பேசியைப் பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்தி கைப்பேசியைப் பறித்துச் சென்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சஜல்மண்டல் (36).

இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில்

வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது அந்த வழியாக வந்த 3 போ் சஜல்மண்டலை வழிமறித்துத் தாக்கியுள்ளனா். மேலும், அவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் கைப்பேசியைப் பறித்து கொண்டு அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதில், பலத்த காயமடைந்த சஜல்மண்டலை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (32), சக்திவேல் (24), ரவிகுமாா் (27) ஆகியோா் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.