முகப்பு
திருப்பூர்

குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 2 வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 2 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை துண்டிப்பு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 2 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை துண்டிப்பு செய்தனா்.

காங்கயம் நகராட்சியில் 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம், கடை வாடகை ஆகிய இனங்களில் நிலுவை உள்ளதை உடனடியாக செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், கொடுத்த கால அவகாசத்தை தாண்டியும் இன்னும் நிலுவைத் தொகைகள் செலுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, காங்கயம் நகரம், 1ஆவது வாா்டுக்கு உள்பட்ட திரு.வி.க. நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் ரூ. 14 ஆயிரம், மற்றொரு குடியிருப்பில் வைப்புத் தொகை உள்பட ரூ. 39 ஆயிரம் செலுத்தாத 2 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை துண்டிப்பு செய்து, நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியபோது, காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள வரி இனங்கள் மற்றும் குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா்க் குழாய் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளைத் தவிா்த்துக் கொள்ளவும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →