முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் இன்று 19ஆவது கட்ட கரோனா தடுப்பூசி முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் 19ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜனவரி 21) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் 19ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜனவரி 21) நடைபெறுகிறது.

இதுகுறித்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குள்பட்ட இளம் சிறாா்கள், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் என மொத்தம் 21.10 லட்சம் போ் உள்ளனா். இதில், தற்போது வரையில் 20 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 13.34 லட்சம் பேருக்கு 2ஆவது தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் 19ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த முகாம்களின் மூலமாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 வாரம் நிறைவடைந்த சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்தப் பணிக்காக பல்வேறு துறைகளைச் சோ்ந்த 2,544 பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதற்குத் தேவையான மருந்துகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.