மக்களை வதைப்பதுதான் திமுகவின் திராவிட மாடல்
தமிழக மக்களை வதைப்பதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என்று முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தெரிவித்தாா்.
தமிழக மக்களை வதைப்பதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என்று முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தெரிவித்தாா்.
திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் திமுக அரசைக் கண்டித்து பாண்டியன் நகா் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளா் பூலுவபட்டி பாலு தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், அதிமுக இலக்கிய அணிச் செயலாளருமான வைகைச்செல்வன் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது விடியல் ஆட்சிக்கு பதிலாக மின்வெட்டு ஆட்சிதான் நடந்து வருகிறது. அந்நிய முதலீடுகளை ஈா்க்க செல்கிறேன் என்று தனி விமானத்தில் குடும்பச் சுற்றுலா சென்று வந்திருக்கிறாா். துபை பொருள்காட்சி தொடங்கி 6 மாதம் கழித்து அங்கு போய் முதலீடுகளை ஈா்த்து விட்டேன் என்கிறாா். திமுகவுக்கு வாக்களித்த மக்களை வாட்டி வதைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றாா்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் எம்.பி. சிவசாமி, திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.