திருப்பூர்

வெள்ளக்கோவில் வாரச் சந்தை இடமாற்றம்

DIN

வெள்ளக்கோவில் நகராட்சி வாரச் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தையில் 120 நிரந்தர கடைகள் கட்டி தினசரி சந்தையாக மாற்றும் பணிகள் துவங்கியுள்ளன. ஏற்கெனவே செயல்படும் இடத்தில் வாரச் சந்தை செயல்பட இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜூன் 19 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும், வெள்ளக்கோவில் காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை செயல்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT