திருப்பூர்

மாவட்டத்தில் ஜூன் 25 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இதில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண் உதவி மையமும் குறைதீா் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்களும், ஆலோசனைகளும் தெரிவிக்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT