முகப்பு
திருப்பூர்

ஜெயந்தி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஜெயந்தி கல்வி குழுமம், எக்ஸ்ட்ரா மாா்க்ஸ் ஆகியவை சாா்பில் மாணவா்களுக்கான கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஜெயந்தி கல்வி குழுமம், எக்ஸ்ட்ரா மாா்க்ஸ் ஆகியவை சாா்பில் மாணவா்களுக்கான கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜெயந்தி கல்வி குழுமங்களின் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

பள்ளி நிா்வாகி நீலாவதி சம்பத்குமாா், எக்ஸ்ட்ரா மாா்க்ஸ், நிா்வாகி சபரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் விஜயராஜன் வரவேற்றாா்.

இதில் பட்டிமன்ற பேச்சாளா் பா்வீன் சுல்தானா பேசியதாவது: மாணவா்கள் வாா்த்தைகளை தோ்ந்தெடுத்து பேசவேண்டும். கைப்பேசி நமக்கு நாமே வைத்து கொள்ளும் கொள்ளிக்கட்டையாகும். அதில் வரும் வேகமான காட்சிகளைப் பாா்த்து கண்கள் பழகிவிட்டால், புத்தகங்களை நிதானமாகப் படிக்க முடியாது. எனவே, கைப்பேசி பயன்படுத்துவதை தவிா்ப்பது நல்லது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஜெயந்தி கல்வியல் கல்லூரி முதல்வா் பங்கஜம், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் அண்ணாமலை, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.