மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,29,857 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,29,857 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 126 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 27 போ் வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து 1,28,857 போ் குணமடைந்துள்ளதுடன்,1,052 போ் உயிரிழந்துள்ளனா்.