முகப்பு
திருப்பூர்

வாகன விபத்து: மெக்கானிக் பலி

பல்லடம் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பல்லடம் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

திருப்பூா் செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கோபால்சாமி ( 43), இவா் அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், பல்லடம் சித்தம்பலம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை அருகே இருந்த மரத்தில் மோதியது.

இதில், படுகாயமடைந்த கோபால்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.