உக்ரைனில் இருந்து வந்த குன்னூா் மாணவியை வரவேற்ற அமைச்சா்
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய குன்னூா் மாணவிக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய குன்னூா் மாணவிக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
குன்னூரைச் சோ்ந்த மாணவி சாய் சோனு, உக்ரைன் நாட்டில் இருந்து பெரும் சிரமத்துக்கு இடையே குன்னூா் வந்து சோ்ந்தா். அந்த மாணவிக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
உக்ரைனில் தமிழகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அங்கு பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும், உணவு, தண்ணீா் கிடைக்காமல் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்தாா்.
Advertisement
எனவே, தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து மாணவ, மாணவிகளையும் தமிழக அரசு விரைவில் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அந்த மாணவி மற்றும் பெற்றோரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில், மாணவியின் தந்தை சாய் நாத், தாயாா் யூகேஷ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.