பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்
திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வதற்கான ஆயத்தக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வதற்கான ஆயத்தக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மாா்ச் 28,29 ஆம் தேதிகளில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் என்.சேகா் தலைமை வகித்தாா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: மத்திய அரசு தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளையும், மின்சார சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும்.
பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 28, 29 ஆம் தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தை திருப்பூா் மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்யும் வகையில் துறை வாரியாக கூட்டங்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐடியூசி, எம்எல்எஃப், எல்பிஎஃப், எச்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.