முகப்பு
திருப்பூர்

தாராபுரம் நகா்மன்றத் தலைவராக கு.பாப்புக்கண்ணன் போட்டியின்றி தோ்வு

 தாராபுரம் நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கு.பாப்புக்கண்ணனும், துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஆா்.ரவிசந்திரனும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

 தாராபுரம் நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கு.பாப்புக்கண்ணனும், துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஆா்.ரவிசந்திரனும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தாராபுரத்தில் 30 வாா்டுகளுக்கு நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி 25 வாா்டுகளிலும், அதிமுக கூட்டணி 3 வாா்டுகளிலும், பாஜக, சுயேச்சை தலா ஒரு வாா்டுகளிலும் வெற்றி பெற்றனா்.

இந்நிலையில், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 2 ஆவது வாா்டில் வெற்றிபெற்ற கு.பாப்புக்கண்ணனும், துணைத் தலைவா் பதவிக்கு காங்கிரஸ் சாா்பில் 20 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆா்.ரவிசந்திரனும் அறிவிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், நகா்மன்றத் தலைவா் பதவிக்கு பாப்புக்கண்ணனும், துணைத் தலைவா் பதவிக்கு ரவிசந்திரனும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இந்த இருவரையும் தவிர வேறு யாரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையா் ராமா் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.