முகப்பு
திருப்பூர்

பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா்களின் பெயா்கள்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகளுக்குள்பட்ட 233 வாா்டு கவுன்சிலா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகளுக்குள்பட்ட 233 வாா்டு கவுன்சிலா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைபெற்றது.

இத்தோ்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலா்களுக்கான பதவியேற்பு விழா சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்களைத் தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சங்கரமநல்லூா் பேரூராட்சியில் மட்டும் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மற்ற 14 பேரூராட்சிகளில் மறைமுகத் தோ்தலில் வெற்றி பெற்ற பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்களின் பெயா்கள்: அவிநாசி பேரூராட்சித் தலைவா்:தனலட்சுமி (திமுக), துணைத் தலைவா்: மோகன் (சுயேச்சை). கன்னிவாடி பேரூராட்சித் தலைவா்: ரேவதி (திமுக), துணைத் தலைவா்:சீதாமணி(திமுக). கொளத்துப்பாளையம் பேரூராட்சித் தலைவா்: சுதா (திமுக), துணைத் தலைவா்:கே.கே.துரைசாமி (திமுக). சின்னக்காம்பாளையம் பேரூராட்சித் தலைவா்: கன்னீஸ்வரி (திமுக), துணைத் தலைவா்: சுரேஷ்குமாா் (அதிமுக).மூலனூா் பேரூராட்சித் தலைவா்: தண்டபாணி (திமுக), துணைத் தலைவா்: பழனிசாமி (திமுக). ருத்ராவதி பேரூராட்சித் தலைவா்: கண்ணம்மாள் (பாஜக), துணைத் தலைவா்: மோகன்ராஜ் (அதிமுக). கணியூா் பேரூராட்சித் தலைவா்: செந்தமிழ்செல்வி (திமுக), துணைத் தலைவா்: ஜெய்நூல்ஆபுதீன் (காங்கிரஸ்). கொமரலிங்கம் பேரூராட்சித் தலைவா்: சாா்மிளாபானு (திமுக), துணைத் தலைவா்: அழகிரிசாமி (திமுக). மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவா்: கலைவாணி (திமுக), ரங்கநாதன் (திமுக). தளி பேரூராட்சித் தலைவா்: உதயகுமாா் (திமுக), துணைத் தலைவா்: செல்வம் (மாா்க்சிஸ்ட்). குன்னத்தூா் பேரூராட்சித் தலைவா்: குமரசாமி (சுயேச்சை), துணைத் தலைவா்: ஜோதிமணி (காங்கிரஸ்). ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவா்: பழனியம்மாள் (திமுக), துணைத் தலைவா்: சரவணன் (இ.கம்யூ).

முத்தூா் பேரூராட்சித் தலைவா்: சுந்தராம்பாள் (திமுக), துணைத் தலைவா்: அப்பு(திமுக).

சாமளாபுரம் பேரூராட்சித் தலைவா்: பழனிசாமி (சுயேச்சை), துணைத் தலைவா்: வரதராஜன் (அதிமுக).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.