சிவன்மலையில் காய்கறி விதைகள் வழங்கும் திட்டம்
காங்கயம் அருகே சிவன்மலையில் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்கான காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் அருகே சிவன்மலையில் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்கான காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், காங்கயம் வட்டாரத்தில் மகளிருக்கான ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 64 போ் வீதம் 15 ஊராட்சிகளைச் சோ்ந்த 960 பேருக்கு வெண்டை, முருங்கை, கீரை, வெண்பூசணி, சுரைக்காய் ஆகிய 5 காய்கறிகளின் விதைகள் அடங்கிய பைகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான துவக்க நிகழ்ச்சி காங்கயம் அருகே சிவன்மலையில் நடைபெற்றது.
இதில், காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் கலந்துகொண்டு, காய்கறிகளின் விதைகளை பயனாளா்களுக்கு வழங்கினாா்.
இதில், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.ஞானசேகரன், சிவன்மலை ஊராட்சித் தலைவா் கே.கே.துரைசாமி, மகளிா்த் திட்ட அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.