வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டு தொழிற்சங்கத்தினா் வாகனப் பேரணி
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டு திருப்பூரில் தொழிற்சங்கத்தினா் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று பின்னலாடை உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டினா்.
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டு திருப்பூரில் தொழிற்சங்கத்தினா் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று பின்னலாடை உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டினா்.
மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் மாா்ச் 28, 29 ஆம் தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பூரில் உள்ள தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டு தொழில் அமைப்புகளிடம் நோட்டீஸ் வழக்கவும் முடிவு செய்திருந்தனா்.
இதன்படி திருப்பூா் குமரன் நினைவகம் முன்பாக சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎஃப், எம்எல்எஃப், ஐஎன்டியூசி, எச்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று
பின்னலாடை துணி உற்பத்தியாளா்கள் சங்கம் (நிட்மா), தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா), திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கம் (டீமா), திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் (டீ) ஆகிய 4 சங்க நிா்வாகிகளிடம் வேலைநிறுத்த முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கி ஆதரவு திரட்டினா்.