முகப்பு
திருப்பூர்

மாநகர மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்: மேயா் என்.தினேஷ்குமாா்

திருப்பூா் மாநகர மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற அனைத்து அலுவலா்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மேயா் என்.தினேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

திருப்பூா் மாநகர மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற அனைத்து அலுவலா்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மேயா் என்.தினேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவுக்கு மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

இவ்விழாவில் பங்கேற்ற மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் பேசியதாவது: பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசு வேலை வாய்ப்புகளில் 40 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, பேறுகால விடுப்பு ஒரு ஆண்டாக உயா்வு, நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் உள்ளிட்ட பல திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

திருப்பூா் மாநகர மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற அனைத்து அலுவலா்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, மகளிா் தின விழாவையொட்டி மாநகராட்சி பெண் அலுவலா்கள், பணியாளா்கள் கேக் வெட்டிக் கொண்டாடினா்.

இறுதியாக விழாவில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் அலுவலா்கள், பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், 41ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் இல.பத்மநாபன், மாநகரப் பொறியாளா் (பொறுப்பு) முகமது சபியுல்லாஹ், செயற் பொறியாளா் முருகன், மாநகராட்சி பெண் அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.