திருப்பூர்

பல்லடத்தில் ரூ. 1.26 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 710 மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒன்றியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

DIN

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 710 மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒன்றியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் அவசரக் கூட்டம் ஒன்றியத் தலைவா் தேன்மொழி தலைமையில், ஒன்றிய துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் மன்ற கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 2022 -23 ஆம் ஆண்டு 15 ஆவது நிதிக் குழு மானியத்தில் சுகாதாரப் பணிகள் ரூ.38 லட்சம், குடிநீா் பணிகள் ரூ.38 லட்சம், பொதுப் பணிகள் ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 710 மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதில், ஒன்றிய ஆணையா் ரமேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் வில்சன், உதவிப் பொறியாளா்கள் கற்பகம், ரங்கசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT