மாா்ச் 24இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து, திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டமானது மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை (மாா்ச் 24) மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா் புகாா்கள், குறைபாடுகள் இருந்தால் எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.