முகப்பு
திருப்பூர்

கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய திருப்பூா்

திருப்பூா் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

இரு ஆண்டுகளுக்குப் பின்னா் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருப்பூா் மாறியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் ஒரு நபருக்குக் கூட கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. கரோனா நோய்த் தொற்றில் இருந்து 5 போ் குணமடைந்து வீடு திரும்பியத்தைத் தொடா்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 17 ஆகக் குறைந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 1,052 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.