முகப்பு
திருப்பூர்

வாகனம் மோதி முதியவா் பலி

 பல்லடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 பல்லடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பூா், போயம்பாளையத்தைச் சோ்ந்தவா் போஸ் (60). இவா் பல்லடம், மங்கலம் சாலையில் உள்ள ஒரு மரக்கடையில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் மங்கலம் சாலையை புதன்கிழமை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த போஸை அங்கிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.